ஏப்ரல் நடுப்பகுதியில் நிலைமை சீராகும்

தற்காலிகமாகவே மின்வெட்டு முன்னெடுப்பு

கடும் வரட்சியான காலநிலையுடன் மின்சாரத்திற்கான கேள்வி 15 வீதத்தினால் உயர்ந்துள்ளது.மின்வெட்டு தற்காலிகமாக முன்னெடுக்கப்பட்டாலும் ஏப்ரல் நடுப்பகுதியாகும் போது நிலைமை சீராகும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மின்சாரத் துறையில் சில சவால்கள் ஏற்பட்டுள்ளன. வரட்சியான காலநிலையும் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறும் இந்த நிலைமைக்கு காரணமாகும். இந்த நிலையில் தற்காலிகமாக புதிய மின் உற்பத்தி திட்டமொன்றை முன்னெடுக்க இருக்கிறோம் கடந்த காலத்தை பேசி பயனில்லை. நாம் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்தும் பட்சத்தில் மின்வெட்டு அமுல்படுத்த தேவையில்லை.மின்சார தட்டுப்பாடு காணப்படுகிறது.இதனை மறைக்க தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

இருக்கும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் எமக்கு பிரச்சினை ஏற்படாது. இது தொடர்பில் மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம். நான் அமைச்சு பொறுப்பை ஏற்று 71 நாட்கள் தான் கடந்துள்ளது. அவசர மின்கொள்வனவு செய்ய எந்த நோக்கமும் கிடையாது.இதனை விட நீண்ட கால மின் உற்பத்தி திட்டத்திற்கு செல்வதே உகந்தது எனவும் அவர் கூறினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதே வேளை மின்வெட்டு அமுல்படுத்தும் நேர அட்டவணை நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் மின்சார சபை அறிவித்துள்ளது. நேற்று முதல் 4 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுவது தெரிந்ததே. (பா)

Tue, 03/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை