முடிவுகள் மேற்கொள்வதில் உள்ள தாமதங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்

கடந்த சில ஆண்டுகளாக துறைமுகங்கள் வியடத்தில் முடிவுகள் மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு விசேட அவதானம் செலுத்துமென துறைமுகங்கள் கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்  சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இன்று (07) தேசிய துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் தொழில் பங்குதாரர்களை அறிவுறுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகமானது தற்பொழுது தன்னுடைய முழுமையான வளர்ச்சியை அடைந்துள்ளது. இவ்வளர்ச்சியானது காலமாற்றத்திற்கேற்ப இடம்பெற்றுள்ளது. இத்துறைச்சார் அபிவிருத்தி நடவடிக்கைகளில் முடிவுகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதமே நாம் இன்று எதிர்நோக்குகின்ற பாரிய பிரச்சினையாகும்.

எவரையும் தண்டிக்கும் பொருட்டு நான் இக்கருத்தை வெளியிடவில்லை. நாம் இவ்வாறான தாமதங்களை தவிர்த்து துரித கதியில் எம்முடைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை எதிர்கொள்ளும் மிக துள்ளியமான பிரச்சினையாக இதனை கருத இயலாது. நான் மின்வலு எரிசக்தி பிரதி அமைச்சராக செயற்பட்ட காலத்திலும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. இத்தாமதங்களிற்கான முக்கிய காரணியை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு முன்வர வேண்டும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகின்ற தேசிய துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் இலங்கை துறைமுக அதிகார சபை தெளிவான விளக்கத்தை கொண்டுள்ளமையால் அவ்வங்கியுடன் இணைந்து செயல்படுகின்றது. இத்திட்ட நகல் பிரதம அமைச்சர் அவர்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளமையால் அது தொடர்பில் மாற்று கருத்துக்கு இடமில்லை. வினைத்திறனான செயற்பாடுகள் மூலமாக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் அதன் பொருட்டு குறிக்கோளுடன் செயல்பட வேண்டும்.

இத்தேசிய துறைமுக மேம்பாட்டு திட்டமானது 2050ம் ஆண்டளவில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை வளர்ச்சியில் அத்திவாரமாக திகழுமென அமைச்சர் தெரிவித்தார்.

Thu, 03/07/2019 - 16:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை