அல்ஜீரிய ஜனாதிபதியை நீக்க இராணுவம் அழுத்தம்

அல்ஜீரிய ஜனாதிபதி அப்தலஸிஸ் பெளட்பிலிக்கா ஆட்சி புரிய தகுதியற்ற நிலையில் இருப்பதை அறிவிக்க வேண்டும் என அந்நாட்டு இராணுவ தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நீடித்து வரும் நிலையில் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய லெப்டினென்ட் ஜெனரல் அஹமட் கெட் சலா, “சட்டத்தின் வரையறைக்குள் உடன் நாம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

தற்போது பிற்போடப்பட்டிருக்கும் எதிர்வரும் தேர்தலில் ஐந்தாவது தவணைக்கு தாம் போட்டியிடவில்லை என்று ஜனாதிபதி ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளார்.

82 வயதான ஜனாதிபதி தனது 20 ஆண்டு ஆட்சியை தொடர்ந்து நீடிக்க முயற்சிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். நாட்டுத் தலைவர் ஆட்சி புரிய தகுதியற்றவர் என குறிப்பிடும் அரசியலமைப்பின் 102 ஆவது சரத்தை பயன்படுத்த அரசியலமைப்பு சபைக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று அஹமட் கெட் சலா வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி பெளட்பிலிக்கா 2013 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது தொடக்கம் அரிதாகவே பொதுமக்கள் முன் தோன்றி வருகிறார்.

Thu, 03/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை