அல்ஜீரிய ஜனாதிபதி மீண்டும் போட்டியிடுவதை கைவிட்டார்

அல்ஜீரிய ஜனாதிபதி அப்தலசீஸ் புத்பிலிக்கா ஏப்ரல் 18 ஆம் திகதி நடைபெறவிருந்த ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்திருப்பதோடு ஐந்தாவது தவணைக்காக போட்டியிடுவதில்லை என்று அறிவித்துள்ளார்.

அப்தலசீஸ் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பு கடந்த சில வாரங்களில் அல்ஜீரியாவில் மக்கள் ஆர்ப்பாட்டத்தை தூண்டியுள்ளது.

20 ஆண்டுகள் பதவியில் இருந்த அவர் 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட பக்கவாதம் காரணமாக மிக அரிதாகவே பொதுமக்கள் முன் தோன்றுவார்.

அப்தலசீஸ் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புது தேர்தலுக்கான திகதிகள் இதுவரை முடிவு செய்யப்படவில்லை ஆனால் அமைச்சரவை மாற்றம் மிக விரைவில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஒத்திவைக்கப்படும் சூழலில் ஜனாதிபதி பதவியை விட்டு இறங்குவாரா என்பது குறித்த கேள்விகளுக்கு அவரது அறிக்கையில் எந்த விளக்கமும் இல்லை.

இதற்கிடையில் அல்ஜீரியாவில் பிரதமர் அஹமத் ஓயாஹியா இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதையடுத்து உள்துறை அமைச்சர் நூறுடீன் பெடோய் புதிய அரசை அமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் என ஏ.பி.எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Wed, 03/13/2019 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை