மலையக வீரர் சண்முகேஸ்வரன் இராணுவ அரை மரதனில் வெற்றி

இலங்கை இராணுவத்தினால் 54 ஆவது தடவையாகவும் ஏற்பாடுசெய்யப்பட்ட இராணுவ படைப்பிரிவுகளுக்கிடையிலான அரைமரதன் ஓட்டப் போட்டியில் இராணுவ பீரங்கிப் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட குமார் சண்முகேஸ்வரன், முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை இராணுவ படைப் பிரிவுகளுக்கிடையில் நடத்தப்படுகின்ற இவ்வருடத்துக்கானஅரைமரதன் ஓட்டப் போட்டிகள் கடந்தவாரம் நடைபெற்றது. இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 140 வீரர்கள் பங்குபற்றியிருந்த இம்முறைப் போட்டியானது நாகொடையிலிருந்து ஹிக்கடுவை வரையான 27 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாக இடம்பெற்றது.

இராணுவ பீரங்கிப் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப் படுத்தி 4ஆவது தடவையாகவும் ஆண்களுக்கான அரைமரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டகுமார் சண்முகேஸ்வரன்,தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக முதலிடத்தைப் பெற்றார்.

குறித்தபோட்டியை ஒரு மணித்தியாலமும் 07.28 செக்கன்களில் நிறைவு செய்த அவர் இவ்வருடத்துக்கான தனது முதலாவது வெற்றியையும் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக, 2016இல் 4ஆவது இடத்தையும், 2017இல் 3ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்ட சண்முகேஸ்வரன்,கடந்தவருடம் இராணுவ அரைமரதன் ஓட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று அசத்தினார்.

மெய்வல்லுனர் அரங்கில் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்திவருகின்ற ஹட்டன் வெலிஓயாவைச் சேர்ந்தசண்முகேஸ்வரன்,கடந்தவருடம் மாத்திரம் எட்டுதங்கப் பதக்கங்களைவென்றுபுதியசாதனைபடைத்தார்.

இதுஇவ்வாறிருக்க,கடந்த ஜனவரிமாதம் நுவரெலியாவில் நடைபெற்ற இராணுவதொண்டர் படையணிநகர்வலஓட்டப் போட்டியில் முதற்தடவையாகப் பங்குகொண்ட சண்முகேஸ்வரன், இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அத்துடன்,கடந்தமாதம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்காகநடத்தப்பட்டதகுதிகாண் போட்டிகளிலும் பங்குபற்றியிருந்த அவர்,போட்டியை 30 நிமிடங்கள் மற்றும் 30.38 செக்கன்களில் நிறைவு செய்து தனது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுமதியையும் பதிவுசெய்திருந்தார்.

இதேவேளை, இராணுவ படைப் பிரிவுகளுக்கிடையிலான அரைமரதன் ஓட்டப் போட்டியில் இராணுவ சமிக்ஞைப் பிரிவைச் சேர்ந்த டி.எம் தஸநாயக்க (ஒருமணி. 08.22 செக்.) இரண்டாவது இடத்தையும், இராணுவபீரங்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த விஜிதகுமார (ஒருமணி. 08.37 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதனிடையே பெண்களுக்கான அரைமரதன் ஓட்டப் போட்டியில் நான்காவது இராணுவ பெண்கள் படைப்பிரிவைச் சேர்ந்த எஸ்.டி லியனகே (ஒருமணி. 21.22 செக்.) முதலிடத்தையும், இரண்டாவது இராணுவ பெண்கள் படைப்பிரிவைச் சேர்ந்த எஸ்.என் பண்டார (ஒருமணி. 25.42 செக்.) இரண்டவாது இடத்தையும்,அதேபடைப் பிரிவைச் சேர்ந்தமலையக வீராங்கனையான கிருஷ்ண குமாரி (ஒருமணி. 31.56 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

பீ.எப் மொஹமட்

Fri, 03/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை