உத்தியோகபூர்வ வங்கி அனுசரணையாளராக செலான்

நீலங்களுக்கிடையிலான  140 ஆவது கிரிக்கெட் போட்டி:

வருடாந்த ரோயல் - தோமஸ் கிரிக்கெட் போட்டிகளின் உத்தியோக பூர்வ வங்கி அனுசரணையாளராக செலான் வங்கி இம்முறையும் தனது அனுசரணையை நீடித்துள்ளது.

இந்த அனுசரணைக்கான காசோலையை ரோயல் கல்லூரியின் அதிபர் பி.ஏ. அபேரத்ன மற்றும் பரி.தோமாவின் கல்லூரியின் காப்பாளர் அருட் தந்தை. மார்க் பிலிமொரியா ஆகியோரிடம்,செலான் வங்கியின் வாடிக்கையாளர் வங்கியியல் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் திலான் விஜயசேகர கையளித்தார். இந்நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் மிஹிலகமெதுரவில் இடம்பெற்றது.

ரோயல் - தோமஸ் கிரிக்கெட் போட்டிகள் நீண்டவரலாற்றைக் கொண்டுள்ளதுடன்,உலகின் நீண்டகாலமாக தடையின்றி விளையாடப்படும் இரண்டாவது கிரிக்கெட் போட்டித் தொடராகவும் அமைந்துள்ளது.

இரு அணிகளும் தமது திறமைகளை கடந்தகாலங்களில் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்ததுடன்,'நீலங்களுக்கிடையிலான சமர்'என இலங்கையின் பாடசாலைகளுக்கிடையில் இடம்பெறும் போட்டிகளில் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்த நிகழ்வாகவும் அமைந்துள்ளது.

செலான் வங்கியின் அனுசரணை தொடர்பாக விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி காமிக டி சில்வா குறிப்பிடுகையில்,'140 ஆவது நீலங்களுக்கிடையிலான சமர் கிரிக்கெட் போட்டிகளுக்கு இரண்டாவது ஆண்டாகவும் உத்தியோக பூர்வ வங்கியாளர் அனுசரணையை வழங்குவதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். ரோயல் - தோமஸ் கிரிக்கெட் போட்டிகள் உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச பார்வையாளர்களையும் கவர்ந்த போட்டித் தொடராக அமைந்துள்ளது.'என்றார்.

இந்தபோட்டித் தொடர் கொழும்பு எஸ் எஸ் சி மைதானத்தில் 7 ஆம் திகதிமுதல் 9 ஆம் திகதிவரை இடம்பெறும்.

Sat, 03/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை