வரவு - செலவு திட்டத்தில் ஜனாதிபதியின் செலவினங்களை தோற்கடிப்பதை ஏற்க முடியாது

அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு சில பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐனாதிபதியின் செலவினங்களுக்கான வரவு - செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்து அதனை தோற்கடிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் "அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தில் அமைக்கட்டுள்ள ஆரம்ப பிரிவிற்கான கற்றல் வள நிலைய கட்டிடத்தை அமைச்சர் இன்று (03) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தலவாக்கலை லிந்துலை நகர சபை தலைவர் அசோக சேபால மற்றும் நகர சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு சில பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐனாதிபதியின் செலவினங்களுக்கான வரவு - செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்து அதனை தோற்கடிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்

கடந்த காலத்தில் ஐனாதிபதியாக இருந்தவர்கள் தங்கள் செலவினங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கீடுகள் செய்து கொண்டார்கள். ஆனால் இன்றைய ஐனாதிபதி அப்படி செய்வதில்லை. ஐனாதிபதியின் செலவினங்களுக்கான வரவு - செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதன் மூலம் ஐனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான முறுகல் நிலை அதிகரிக்குமே தவிர குறைவடையாது. எனவே இது எங்களுக்கும் இந்த நாட்டிற்கு மேலும் பாதகமாக அமையும்.

எனவே இந்த நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும். நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற வகையில் அப்படியே செயற்படுகின்றோம்.

ஐனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக பயணித்தால் மாத்திரமே நாட்டின் அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும் என்றார்.

(ஹட்டன் சுழற்சி நிருபர்– ஜி.கே. கிருஷாந்தன்)      

 

Sun, 03/03/2019 - 14:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை