புனித திரிபீடக வாரம் இன்று முதல் ஆரம்பம்

பௌத்த கொடிகளை பறக்கவிடுமாறு வேண்டுகோள்

இலங்கை பிக்கு பரம்பரையின் உன்னத பங்களிப்பில் பேணப்பட்டு வந்த தூய பௌத்த போதனைகள் உள்ளடங்கிய தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படுவதையிட்டு இன்று 16ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதி “திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துமாறு யுனெஸ்கோ அமைப்பிற்கு அனைத்து பௌத்த நாடுகளினதும் ஒத்துழைப்புடன் இலங்கை முன்மொழிவை சமர்ப்பிக்கும் தேசிய மகோற்சவம் மூன்று நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்குபற்றலில் மார்ச் 23ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகம், புத்தசாசன அமைச்சு, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன ஏனைய அமைச்சுக்களுடன் ஒன்றிணைந்து “திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரம் முழுவதும் பல்வேறு சமய நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அவ்வாரம் முழுவதும் அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள், இல்லங்கள், வாகனங்கள் மற்றும் பெருந்தெருக்களில் பெளத்த கொடியை காட்சிப்படுத்துமாறு சகல மக்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Sat, 03/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை