டி.எஸ் - மஹாநாம தங்க யுத்தம் இன்று சரா ஓவல் மைதானத்தில்

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி-மஹாநாம கல்லூரிகளுக்கு இடையிலான 13 வது தங்க யுத்தம் வருடாந்த கிரிக்கெட் போட்டி இன்று 29, நாளை 30ம் திகதி பீ சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதற்கு இணைந்ததாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான அரவிந்த டி சில்வா சவால் கிண்ணத்துக்கான ஒரு நாள் போட்டி அடுத்த மாதம் 6ம் திகதி ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நான்காவது வருட திறமையாளரான பசிது ஆதித்யாவின் தலைமையில் டி. எஸ். சேனாநாயக்க கல்லூரியும் நான்காவது வருட திறமையாளரான பெதும் பொதேஜு தலைமையில் மஹாநாம கல்லூரியும் களமிறங்குகின்றன.

டி. எஸ். சேனாநாயக்க கல்லூரி கடந்த பாடசாலை கிரிக்கெட் காலாண்டில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதோடு மஹாநாம கல்லூரி இரண்டு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன. மஹாநாம கல்லூரியின் சார்பில் சோனால் கமகே மற்றும் ரத்நாயக்க ஆகியோரும் விளையாடவுள்ளார்கள். டி. எஸ். கல்லூரியின் சார்பில் முதித லக்ஷான் இணைந்துள்ளார். இந்த வீரர்கள் மூவரும் 19 வயதுக்கு கீழ் தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்பவர்களாவார்கள்.

இதுவரை நடைபெற்றுள்ள 12 போட்டிகளில் டி. எஸ். அணி வெற்றிபெற்றுள்ளதுடன் ஏனைய போட்டிகள் அனைத்தும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன. 13 வது தங்க யுத்தத்தின் பிரதான அனுசரணையாளராக பிரிமா கொத்துமீ செயல்படுவதோடு டயலொக் ஆசியாடா நிறுவனமும் தம்ரோ வீட்டு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனமும் இணை அனுசரணை வழங்குகின்றன.

Fri, 03/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை