பூமியை தாக்கிய சூரிய புயல் சுவடு கண்டுபிடிப்பு

கி.மு. 660 ஆம் ஆண்டில் பூமியை, மிகப்பெரிய சூரியப் புயல் தாக்கியதற்கான சுவடுகள், கிரீன்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு கதிர்வீச்சு கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பனிப் பாளங்களில் அரை கிலோமீற்றர் தொலைவுக்கு இரசாயனப் பொருட்கள் படிந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது, சூரியப் புயலின் தாக்கத்தால் உருவானது எனக் கூறியுள்ள அவர்கள், கடந்த 70 ஆண்டுகளில் நவீன கருவிகளில் பதிவான சூரிய புயல்களைக் காட்டிலும், 10 மடங்கு வலிமையானதாக இருந்ததாக கூறியுள்ளனர்.

இதேபோன்ற மற்றொரு சூரியப் புயல் விரைவில் பூமியைத் தாக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Wed, 03/13/2019 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை