வீட்டில் வளர்த்த சிங்கம் தாக்கி செக் நாட்டவர் பலி

செக் குடியரசில் தனது வீட்டின் கூண்டு ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த சிங்கம் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொல்லப்பட்டிருக்கும் மைக்கல் பிரசெக் என்ற ஆடவர் தனது வீட்டில் ஒன்பது வயது ஆண் சிங்கம் ஒன்றையும் இனப்பெருக்கத்திற்காக மற்றொரு பெண் சிங்கத்தையும் வளர்த்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.

உள்ளால் மூடப்பட்டிருந்த சிங்கக் கூண்டுக்குள் இருந்து பிரசெக்கின் உடலை அவரது தந்தை கண்டுபிடித்துள்ளார். சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட பொலிஸார் அந்த சிங்கங்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.

அந்த நபரின் உடலை வெளியே எடுப்பதற்கு சூடு நடத்த வேண்டி ஏற்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 33 வயதான பிரசெக் 2016 ஆம் ஆண்டு ஆண் சிங்கத்தை வாங்கி இருப்பதோடு கடந்த ஆண்டு பெண் சிங்கத்தை வாங்கியுள்ளார். அவைகளை தமது வீட்டுக்கு அருகில் கூண்டு அமைத்து வளர்த்து வந்துள்ளார்.

இதற்கு முன்னர் வீட்டில் அந்த விலங்குகளை வளர்க்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

Thu, 03/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை