வசந்த கரன்னகொட இன்று சி.ஐ.டி. முன்னிலையில் ஆஜர்

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவை இன்று (11) காலை சி.ஐ.டி. முன்னிலையில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று நீதியரசர்கள் கொண்ட உச்ச நீதிமன்ற குழாம் அண்மையில் கூடிய போ​தே இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்து. 

இதன் பிரகாரம் கொழும்பு கோட்டையில் உள்ள சி.ஐ.டி.யின் தலைமையகத்தில் இன்று காலை 9மணிக்கு  வசந்த கரன்னகொட ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்படுவதுடன் இவரிடமிருந்து வாக்கு மூலங்களும் பெறப்படவுள்ளன.

குற்றவியல் கோவையின் 338மற்றும் 296ஆகிய பிரிவுகளில் குற்றம் இழைத்ததாக முன்னாள் கடற்படை தளபதி மீது குற்றம் சுமத்துவதற்கு சட்டமா அதிபர் பரிந்துரை செய்துள்ளார். 

2008/2009காலப் பகுதியில் கொழும்பில் வைத்து 11இளைஞர்களை கடத்திச் சென்று தடுத்து வைத்து அவர்களை கொலை செய்ததாக முன்னாள் கடற்பதைளபதி மற்றும்13பேர் மீது சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம் சுமத்தியிருந்தது.

இது பற்றி சி.ஐ.டி.யினர் கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். எனினும் மேற்படி கடத்தல் மற்றும் கொலைகள் தொடர்பாக கரன்னகொடவுக்கு தெரிந்திருந்தும் அதனை தடுப்பதற்கு அவர் எதுவும் செய்திருக்கவில்லை என்பதாலே  அவர் மீது குற்றம் சுமத்த தான் தீர்மானித்ததாக சட்டமா அதிபர் கூறியதாக மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன கடந்த வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Mon, 03/11/2019 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை