அதிக ஒலியுடன் பயணிக்கும் பஸ்களுக்கு தடை

டெஸிபஸ் எண்பதுக்கு (80) அதிகமாக கசெட், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளை இயக்கும் உள்ளூர் மாகாண தனியார் பஸ்களுக்கு தராதரம் பாராது கடும் தண்டனை வழங்க உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் ஜனக மல்லிமாராச்சி தெரிவித்தார்.

குறிப்பிட்ட பஸ்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் சிவில் உடையில் சென்று சுற்றிவளைக்க திட்டமிட்டுள்ளார்கள். 

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் சாரதிகளுக்கான நெறிமுறையொன்றை தயாரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி எதிர்வரும் காலங்களில் சிசு செரிய பஸ் வண்டிகளில் தேசாபிமான பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படும்.   

Tue, 03/12/2019 - 09:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை