‘Airtel’s Fastest’150 Kmph க்கும் அதிகமான வேகத்திற்கான தேடல்

தடையின்றி இயங்கும் டேடா வலையமைப்பான பார்தி எயார்டெல் லங்கா (எயார்டெல்) இலங்கையின் வேகமான பந்து வீச்சாளரை தேடும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. ‘Airtel’s Fastest’எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு,பெப்ரவரி 23 ஆம் திகதி ஆரம்பமானது. இதனூடாக இலங்கையின் ஆரம்ப நிலை பாடசாலை மற்றும் பெண்கள் பிரிவுகளின் அதிவேகப் பந்து வீச்சாளர்களை இனங்கண்டு வெளிக்கொணரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்த அறிமுக நிகழ்வு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்,'இந்தவிடயம் தொடர்பில் நான் தொடர்ச்சியாககவனம் செலுத்திவந்திருந்த நிலையில்,எயார்டெல் இதனை முன்னெடுத்துள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கது. இலங்கையில் இனங்காணப்படாத திறமைசாலிகள் ஏராளமானோர் உள்ளனர்.தேசிய அணிக்காக விளையாடும் தமது கனவை நனவாக்கிக் கொள்ள வாய்ப்புகளை தேடிய வண்ண முள்ளனர். ‘Airtel’s Fastest’ என்பது இவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதுடன்,இந்தநடவடிக்கையினூடாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நட்சத்திரங்களை எம்மால் இனங் காணக்கூடியதாக இருக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.'என்றார்.

16 – 24 வயதுக்குட்பட்டஎவரும் இந்த திறந்தசுற்றில் பங்கேற்கமுடியும். யாழ்ப்பாணம்,பொலன்னறுவை,மட்டக்களப்பு,மாத்தறை,பதுளை,ருவன்வெல்ல,கம்பஹா,குருநாகல்,கண்டி,ஹொரணமற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இந்தப் போட்டிகள் இடம்பெறும். ஆரம்ப கட்டத்திலிருந்து சுமார் 100 வேகப்பந்து வீச்சாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு,லசித் மாலிங்க,அனுஷ சமரநாயக்க மற்றும் சமிந்தவாஸ் ஆகியோரைக் கொண்ட Airtel’ இன் ‘Super Star coaching team’ உடன் பயிற்சிமுகாமில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இதனைத் தொடர்ந்து அவர்கள் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் வேகமான பந்து வீச்சாளரை தெரிவு செய்யும் சவால்களுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பார்தி எயார்டெல் லங்காவின் பிரத ம நிறைவேற்று அதிகாரி ஜினேஷ் ஹெக்டே கருத்துத் தெரிவிக்கையில்,'இளைஞர்களுக்கான வலுவூட்டலுக்காக எயார்டெல் எப்போதும் முன்வந்திருந்தது. அவர்களின் திறமைகளை மேம்படுத்து வதற்கு சிறந்த கட்டமைப்புகள் மற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது என்பதில் நாம் உறுதி கொண்டுள்ளதுடன்,‘Airtel’s Fastest’ இதற்கு மற்றுமொரு உதாரணமாகும். உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சு திறமையாளர்களில் நாம் முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். அவர்களின் அனுபவத்திலிருந்து இளம் வீர,வீராங்கனைகள் அனுகூலம் பெறுவார்கள் என்பது உறுதி. முழு திறன் காண் நிகழ்வும், 20 அங்கங்களைக் கொண்ட தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் எம்முடன் கைகோர்த்துள்ள தெரண தொலைக்காட்சி எமக்கு உதவிகளை வழங்கிவருகின்றது.

“Airtel’s fastest” போன்ற உள்நாட்டு போட்டிகளை ஏற்பாடுசெய்வதன் முக்கியத்துவம் பற்றி இலங்கைகிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஜாம்பவான்களும் தமது கருத்துக்களைகுறிப்பிட்டனர். இதனூடாக உறுதியான ஆண்,பெண் இலங்கை கிரிக்கெட் தேசிய அணியை உருவாக்குவதற்கு எவ்வாறான பங்களிப்பை பெற்றுக் கொடுக்கமுடியும் என்பது பற்றியும் தெரிவித்திருந்தனர்.

இலங்கையின் எதிர்கால தேசிய கிரிக்கெட் அணிக்கு வலுச் சேர்க்கும் வாய்ப்புகள் குறித்து, இலங்கையின் வேகப் பந்து வீச்சாளரும்,வர்த்தக நாம தூதுவருமான லசித் மாலிங்க கருத்துத் தெரிவிக்கையில்,'தேசிய மட்டத்தில் இலங்கை அணிக்கு புதிய திறமை சாலிகள் தேவைப்படும் ஒரு தருணத்தில்,பார்தி எயார் டெல் லங்கா முன்னெடுக்கும் இந்ததிட்டம், இலங்கையின் இளம் வீரர்களுக்கு சிறந்தவாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தவாய்ப்பை பயன்படுத்தி தமது திறமைகளை வெளிப்படுத்த முன்வருமாறு அனைத்து ஆர்வமுள்ள இளைஞர்,யுவதிகளையும் நான் வரவேற்கிறேன்.'என்றார்.

Tue, 03/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை