75வது பிரட்பி கிண்ணப் போட்டிகள் பெரும் ஆரவாரத்துடன் ஆரம்பம்

இலங்கை பாடசாலை ரக்பி போட்டிகளில், பிரட்பி கிண்ணப் போட்டித் தொடர் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகின்றன. இதன் முதலாவது போட்டி நிகழ்ச்சி, 1920 ஆம் ஆண்டில் கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கண்டி டிறினிட்டி கல்லூரி அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.

அன்று முதல் 1945 வரை எந்தவித தங்கு தடைகளும் இன்றி வருடா வருடம் இந்த இரு அணிகளுக்கிடையிலும் போட்டி தொடராக நடைபெற்று வந்துள்ளன. அப்போது றோயல் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய ஈ.எல்.பிரெட்பி அவர்களால் முதல் முறையாக கிண்ணம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் பிரட்பி கிண்ணத்திற்கு 75 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இது, ஈ.எல்.பிரட்பி அவர்களின் வழிகாட்டலின் கீழ், வெள்ளி உலோக வேலைப்பாடுகளில் புகழ்பெற்ற கண்டியைச் சேர்ந்த கலைஞரினால் தயாரிக்கப்பட்டது. கொழும்பிலும், கண்டியிலும் இரண்டு போட்டித் தொடர்கள் இடம்பெறுகின்றன. இந்த இரு போட்டிகளிலும் பெற்றுக் கொள்ளப்படும் புள்ளிகளின் மொத்தம் கணக்கிடப்பட்டு தொடரின் வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவார்.

இவ்வருடம் பிரட்பி கிண்ணத்திற்கான போட்டிகளின் ஒரு பிரதான அம்சமாக பல்வேறு புதிய நடைமுறைகளும், சிறப்பம்சங்களும் இடம்பெறவுள்ளன. 2019 மார்ச் முதலாம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைற் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ரக்பி போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஹரித் ஜயசூரிய இந்த விடயம் பற்றி அறிவித்துள்ளார். பிரட்பி இலச்சினை அறிமுகமாகும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு, நாணயச் சுழற்சிக்கான நாணயத்தின் அறிமுகம், உத்தியோகபூர்வ இணைய தளத்தின் மீள் ஆரம்பம் மற்றும் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தபாலுறையும் முத்திரை வெளியீடும் போன்ற பல்வேறு நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த நிகழ்வுகளை நினைவுகூரும் வகையிலான கோப்பி மேசை சஞ்சிகை 75வருட பிரட்பி கிண்ண வரலாற்றை குறிக்கும் வகையில் அமைந்திருக்கும். மே 01 ஆம் திகதி இது வர்த்தக ரீதியாக வெளியிடப்படவுள்ளது.

இவ்வருட பிரட்பி கிண்ணப் போட்டிகளில் முதலாவது தலைவர்களின் ஒன்றிணைவு மற்றும் பிரட்பி பழைய தலைவர்களும் அவர்களின் பாரியார்களும் இந்த விசேட நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். றோயல் டஸ்கரின் விஸ்தரிப்பு மற்றும் றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கென விசேடமாக அமைக்கப்பட்ட தனியான அமரும் இடங்கள் என்பன இங்கு திறந்து வைக்கப்படவுள்ளன.

றோயல் ரக்பி 2019 நிகழ்ச்சிக்கு உத்தியோகபூர்வ அனுசரணை வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்வின் பிரதான அனுசரணையாளராக சிங்கர் ஸ்ரீலங்கா செயற்படும். அரின்மா ஹோல்டின்ஸ் பிரதான அணி அனுசரணையாளராகவும், பிராண்டிக்ஸ் இணை அனுசரணையாளராகவும் கலந்து கொள்ளும். விஷன் கெயார் மூக்குக்கண்ணாடி பங்காளியாகவும், பிரிமா உத்தியோகபூர்வ உணவுப் பங்காளியாகவும், மைலோ பானங்களுக்கான பங்காளியாகவும், ஸ்கான் குடி நீருக்கான பங்காளியாகவும், ஒம்னிகொம் மீடியா குழுமம் ஊடக வெளியீட்டுப் பங்காளியாகவும், அட்டொம் டிஜிட்டல் ஊடக பங்காளியாகவும், குவட்ராங்கல் சமூக ஊடகப் பங்காளியாகவும், போல்ட் கியர் ஆடைகள் பங்காளியாகவும், லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் சுகாதார சேவைகள் பங்காளியாகவும், கிறீன் கெபின் உணவு தயாரிப்புப் பங்காளியாகவும், HNB வங்கி பங்காளியாகவும், மொபில் உராய்வு எண்ணெய் பங்காளியாகவும் மற்றும் MAC ஹோல்டின்ஸ் பொருட்கள் போக்குவரத்துப் பங்காளியாகவும், றோயல் டஸ்கரின் பங்காளியாக ஹோம் லான்ட்ஸ் நிறுவனமும் செயற்படுகின்றன.

Wed, 03/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை