737 மெக்ஸ் விமானங்களை பறக்கவிட்டு தீவிர சோதனை

போயிங் 737 மெக்ஸ் ரக விமானங்கள் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து போயிங் நிறுவனம் அந்த ரகத்தைச் சேர்ந்த விமானங்களைப் பறக்கவிட்டு சோதனை செய்துள்ளது. விமான விபத்துகளுக்கு காரணம் எனச் சந்தேகிக்கப்படும் கோளாறைச் சரிசெய்ய சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த ரகத்தைச் சேர்ந்த விமானங்கள் பறப்பதற்கு இந்த மாதம் 13ஆம் திகதியில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவை மீண்டும் சேவைக்குத் திரும்ப, அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து அமைப்பிடம் இருந்து போயிங் ஒப்புதல் பெறவேண்டும். இருப்பினும், கோளாறைச் சரிசெய்வது தொடர்பான பரிந்துரையை அது இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. போயிங் 737 மெக்ஸ் ரகத்தைச் சேர்ந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் இந்த மாத ஆரம்பத்திலும், லயன் ஏர் விமானம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதமும் விழுந்து நொறுங்கியதில் சுமார் 340 பேர் உயிரிழந்தனர்.

Thu, 03/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை