732 மெக்ஸ் ரக விமானங்களின் பாதுகாப்பை மேம்படுத்திய போயிங்

போயிங் நிறுவனம் தமது 737 மெக்ஸ் ரக விமானங்களின் கட்டுப்பாட்டு கட்டமைப்புகளுக்கு மாற்றங்களைச் செய்துள்ளது.

கடந்த ஆறு மாதத்தில், 737 மெக்ஸ் ரக விமானங்கள் இரண்டு விபத்துக்குள்ளானதை அடுத்து, அந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, விமானி, கட்டமைப்பின் செயல்பாட்டை முழுவதுமாக ஏற்று நடத்துவதற்கு வகை செய்யும் நோக்கில், மென்பொருட்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கட்டமைப்புகளில் ஏற்படும் கோளாறுகள் குறித்து எச்சரிக்க விளக்கு சமிக்ஞைகளும் பயன்படுத்தப்படும். முன்னதாக, அத்தகைய எச்சரிக்கை சமிக்ஞைகள் கட்டாயமாக்கப்படவில்லை. விபத்துக்குள்ளான எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மற்றும் லயன் ஏர் விமானங்களில், அந்த எச்சரிக்கை சமிக்ஞை பொருத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், புதிய கட்டமைப்புகள் குறித்து விமானிகளுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படும் என்றும் போயிங் நிறுவனம் கூறியது. கணினி வழிப் பயிற்சிகள் மட்டுமின்றி, செயல்முறை பயிற்சிகளும் அளிக்கப்படும் என்று அது தெரிவித்தது.

அந்தப் பயிற்சிகள், விமானிகளுக்கு புதிய நடைமுறைகள், விமானப் பணிக் குழுவின் செயல்முறைகள், மென்பொருள் மாற்றங்கள் ஆகியவை பற்றி மேம்பட்ட புரிதலை அளிக்கும் என்று போயிங் கூறியது.

மேலும், 737 மெக்ஸ் ரக விமானிகள் அனைவரும் அந்தப் பயிற்சியை முடித்த பின்னரே பணிக்குத் திரும்ப முடியும் என்றும் அது தெரிவித்தது.

Fri, 03/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை