6ஆவது உள்ளக பிரீமியர் லீக் கிரிக்கெட், உதைபந்தாட்டத் தொடர்

பாலமுனை சின்னப்பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தின் 6வது உள்ளக பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி மற்றும் உதைபந்தாட்டத் தொடர் என்பன சின்னப்பாலமுனை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.

சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஆசிரியர் எம்.எச். நிஸார்தீன் தலைமையில் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான இப்பருவகால விளையாட்டுப் போட்டிகளில் 4 அணிகள் பங்குபற்றியிருந்தன.

றோயல் ஸ்டைகர்ஸ், றைஸங் ஸ்டார்ஸ், றோயல் பிளாஸர்ஸ், கலக்ஸி ஸ்டார்ஸ் ஆகிய 4 உள்ளக சுப்பர் ஓக்கிட் அணிகள் 4 நிற வர்ண கழக சீருடைகளை அறிமுகப்படுத்தி இப்பருவகால போட்டிகளில் பங்குபற்றின.

கடந்த (23) நடைபெற்ற இறுதி நாள் நிகழ்வுகளில் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளருமான எம்.ஏ. அன்சில் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்செனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் எஸ்.எம்.எம். ஹனீபா, பிரதேச சபை உறுப்பினர்களான எச்.எம்.சிறாஜ், எம். பதுர்தீன், பள்ளிவாயல் தலைவர் ஏ. உதுமாலெவ்வை, பிரதி அதிபர் பி.முஹாஜிரீன், விளயாட்டு உத்தியோகத்தர் எஸ்.எச். அஸ்வத், பொறியியலாளர் எம்.எச். நௌஸாத் உட்பட விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், அரச அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொணடனர்.

இதில், கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இறுதிப் போட்டியில் றோயல் பிளாஸர்ஸ் அணியை எதிர்த்தாடிய - றோயல் ஸ்டைகர்ஸ் அணியினர் சம்பியன் கிண்ணத்தையும், உதைபந்தாட்டத் தொடரில் கலக்ஸி ஸ்டார்ஸ் அணியை எதிர்த்தாடிய றைஸிங் ஸ்டார்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தையும் பெற்றுக் கொண்டன. இப்போட்டித்தொடரில் வெற்றிபெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணமும் பணப் பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறந்த இளம் வீரர், துரித 50 ஓட்டங்கள் பெற்றவர், கூடிய 6 ஓட்டக்காரர், சிறந்த துடுப்பாட்டக் காரர், சிறந்த பந்து வீச்சாளர் பொன்ற விருதுகள் வழங்கப்பட்டதுடன் எராளமான கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

(பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்)

Sat, 03/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை