அல்ஜீரிய ஜனாதிபதி 5ஆவது தவணைக்கு மீண்டும் போட்டி

அல்ஜீரிய ஜனாதிபதி அப்தலசீஸ் பெளடெப்லிக்கா ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தபோதும் தாம் முழு தவணைக்கும் பதவியில் இருக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

வரும் ஏப்ரல் மாத தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் புதிய தேர்தலுக்கு வழிவகுக்கும் தேசிய உரையாடல் ஒன்றுக்கு பொறுப்பு வகிப்பதாகவும் அந்தத் தேர்தலில் போட்டி இடுவதில்லை என்றும் அவர் எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாவது தவணைக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக பெளடெப்லிக்காவின் அறிவிப்பு தேசிய அளவில் ஆர்ப்பாட்டங்களை தூண்டியுள்ளது.

2013 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் தாக்கப்பட்ட 82 வயதான பெளடெப்லிக்கா பொதுமக்கள் முன் தோன்றுவது மிக அரிதாகவே உள்ளது. வேட்பாளர் பதவிக்கான இறுதிக் கெடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லிரவுடன் முடிவதை இட்டு அன்றைய தினத்தில் புதிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக பெளடெப்லிக்கா சுவிட்சர்லாந்து சென்றிருக்கும் நிலையில் அவரின் சார்பில் அவரது பிரசார முகாமையாளர் வேட்டுபுமனு தாக்கல் செய்துள்ளார். 100,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்ட சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததை அடுத்தே 1999 ஆம் ஆண்டு பெளடெப்லிக்கா அதிகாரத்திற்கு வந்தார்.

Tue, 03/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை