கிழக்கில் மேலும் 5.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

RSM
கிழக்கில் மேலும் 5.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பு-Eastern Province 5.5 Acre Land Released

இராணுவ பாதுகாப்பு நோக்கத்துக்காக பயன்படுத்த வந்த  5.5 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஐயசேகரவினால்  கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது.

கிழக்கில் மேலும் 5.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பு-Eastern Province 5.5 Acre Land Released

யுத்த காலத்திலிருந்து இராணுவத்தினர் வசமிருந்த காணிகளைக் கையளிப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக வளாகத்தில் இன்று (25) முற்பகல் 11.00 மணிக்கு இடம்பெற்றது.

அதற்கமைய, திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி திரியாயில் 3 ஏக்கர் காணியும், அம்பாறை மாவட்டத்தில்  பெரிய நீலாவணையில் 0.5 காணியும் , திருக்கோவில் பகுதியில் 2 ஏக்கர் காணியும் என 5.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் மேலும் 5.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பு-Eastern Province 5.5 Acre Land Released

இந்நிகழ்வில் திணைக்கள தலைவர்கள், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், இராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் அப்துல்சலாம் யாசீம்)

Mon, 03/25/2019 - 13:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை