இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம்: 50 பேர் பலி

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான பப்புவாயில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்திருப்பதோடு மீட்பாளர்கள் பாதிக்கப்பட்டோரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மாகாணத் தலைவர் ஜயபுராவுக்கு அருகில் நீடித்த கடும் மழை மற்றும் மண் சரிவுகள் காரணமாகவே அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரினால் பல வீடுகள் சேதமாகி இருப்பதாக தேசிய அனர்த்த பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் சுடோபோ புர்வோ நுக்ரொஹோ குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மிட்பாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதியை அடைவதில் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

காயமடைந்தவர்கள், சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், மாண்டோரின் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

மீட்புப் பணிகள் தொடரும் வேளையில், அந்த சம்பவத்தில் மாண்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Mon, 03/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை