ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டால் 5 வருட சிறைத் தண்டணை-ஹரீன் பெர்னாண்டோ

விளையாட்டுத்துறையில் ஈடுபடுபவர்கள் ஆட்ட நிர்ணயம், சூதாட்டம் மற்றும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பாவனையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் தகுதி தராதிரம் பாராமல் அவர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டணை அல்லது ஐந்து மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்படுவதற்கான சட்டத்தை விரைவில் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவ்வாறான சட்டத்தை நிறைவேற்று கின்றமுதல் ஆசிய நாடாக இலங்கை மாறும் என்பதாகத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர்,அதுதொடர்பிலான சட்டமூலமொன்றை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கு கட்டடத் தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையத்தின் (ஸ்லாடா) 4 மாடிகளைக் கொண்ட புதியகட்டடம் (28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இந்தவைபவத்தில் உரையாற்றும் போதேஅவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான இளைஞர்களுக்கு தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தொடர்பில் அறிந்திருக்கவில்லை. அவர்களுடைய பயிற்சியாளர்களினால் வழங்கப்படுகின்ற ஊட்டச்சத்துக்கள் அவர்களுக்கு பாதிப்பினைப் ஏற்படுத்தும் என்பதையும் அறிந்திருக்கமாட்டார்கள். எமதுநாட்டிலும் திறமையானவீரர்கள் இருக்கின்றார்கள் என்பதை கடந்த வாரம் நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.11 செக்கன்களில் ஓடிய வீரரைவைத்து அறிந்து கொள்ளமுடியும்.

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து,போதைப் பொருள் பாவனை என்பன வாழ்க்கையை சீரழிக்கும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விடயங்களை பாடசாலைபாடங்களில் உள்ளடக்கப்பட வேண்டும். அதனால் அவர்களை தவறான வழிகளில் செல்வதை தடுக்க முடியும் எனதெரிவித்தார்.

விளையாட்டுத்துறையில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டணை விதிக்கப்படவேண்டும் எனவிளையாட்டுத்துறைஅமைச்சர் ஹரீன் பெர்னாண்டோதெரிவித்தார்.

அவர் மேலும் இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில்,ஆட்ட நிர்ணயம்,தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துபாவனைஆகியவற்றில் ஈடுபடுவோருக்குகடும் தண்டணை விதிக்கப்படவேண்டும். இத்தகை யகுற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டணை அல்லது 5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்படவேண்டும். அதன்மூலம் குற்றச் செயல்களை தடுக்கமுடியும்.

நாம் மிகவும் நேசிக்கின்ற கிரிக்கெட் விளையாட்டைச் சேர்ந்த முக்கிய வீரரொருவருக்கு அண்மையில் இரண்டு ஆண்டுகள் போட்டித் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது எதிர்கால சந்ததியினருக்கு மிகப் பெரியதாக்கத்தைஏற்படுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தக் கட்டடத்தை நிர்மாணிக்கப்படுவதற்கு முன்நின்று செயற்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு விசேட நன்றிகளையும் விளையாட்டுத்துறைஅமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இதன்போது தெரிவித்தார்.

குறித்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன த சில்வா, இன்னும் ஒருவருடத்தில் தான் குறித்த பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர்,பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட் இந்தப் பயணத்தை இன்னும் பலப்படுத்துவதற்குநீங்கள் குறித்தபதவியில் தொடர்ந்து 5 வருடங்கள் பணியாற்றவேண்டும் எனகேட்டுக் கொண்டார்.

Sat, 03/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை