4th ODI; SLvSA: தென்னாபிரிக்க அணி வெற்றி

AMF

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றுள்ளது.

தென்னாபிரிக்க அணி 32.5 ஓவர்களில் (190/4) ஓட்டங்களைப் பெற்று 6விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இப் போட்டியில் இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து  39.2ஓவர்களுக்கு 189 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவிக் கொண்டது. 

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நேற்று (13) பகலிரவு போட்டியாக இப்போட்டி இடம்பெற்றது.

இப் போட்டியில் De Kock 51, du Plessis 43, Duminy 31*, ஆகியோர் அதிகூடிய ஓட்ங்களைப் பெற்றுக் கொடுத்தனர். அத்தோடு Phehlukwayo 2-21 என்ற கணக்கில் பந்து வீச்சில் பங்களிப்பு செய்து அணியின் வெற்றிக்கு வலு சேர்த்துள்ளார்.

அதேபோன்று இலங்கை அணியில் Udana 78, Nortje 3-57 என்ற கணக்கில் ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். Dhananjaya 3-41என்ற கணக்கில் விக்கெட்டுக்களை வீழத்தினார்.

இலங்கை அணி சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 4 போட்டிகளில் வெற்றிபெற்று முன்னணியிலுள்ளது. ஐந்தாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (16) தென்னாபிரிக்காவில்  பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

Thu, 03/14/2019 - 08:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை