4th ODI; SLvSA: இலங்கைக்கு துடுப்பெடுத்தாட அழைப்பு

Rizwan Segu Mohideen
4th ODI; SLvSA: இலங்கைக்கு துடுப்பெடுத்தாட அழைப்பு-4th ODI SLvSA-Toss-SA Opt to Field

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்காவதும் நான்காவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் பகலிரவு போட்டியாக இப்போட்டிஇடம்பெறுகிறது.

இலங்கை அணி சார்பில், பிரியமால் பெரேராவுக்கு ஒரு நாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கன்னி போட்டியில் விளையாடும் 25 வயதான பிரியமால் பெரேரா, காயமுற்ற குசல் பெரோவுக்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாற்றம் தவிர இன்றைய போட்டியில் மேலும் இரு மாற்றங்களை இலங்கை அணி மேற்கொண்டுள்ளது. கடந்த மூன்று போட்டிகளிலும் பத்திற்கும் குறைவான ஓட்டங்களை பெற்ற விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல நீக்கப்பட்டு உபுல் தரங்க மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளதோடு, பந்து வீச்சு முறை தொடர்பில் சர்ச்சைக்குள்ளாகி மீண்டும் இணைக்கப்பட்ட அகில தனஞ்சய, தனது புதிய பந்து வீச்சு பாணியின் மூலம் கடந்த ஆண்டைப் போன்று சரியான வெளியீட்டை வழங்காமை காரணமாக அவர் நீக்கப்பட்டு, அவரது இடத்திற்கு  சகலதுறை ஆட்டக்காரரான தனஞ்செய டி சில்வா இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஏய்டன் மார்க்ரம், டேல் ஸ்டேன், அன்ரிச் நோர்ட்ச், ஜே.பி. டுமினி ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ள தோடு, கசிசோ ரபடா, இம்ரான் தாஹிர், ரஸ்ஸி வன் டெர் டஸ்ஸன், ட்வாயன் பிரிடோரியஸ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் ஏற்கனவே இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றிய நிலையில், இலங்கை அணி எஞ்சியுள்ள இரு போட்டிகளிலும் ஆறுதல் வெற்றியை பெறுவதற்காக போராடும் என எதிர்பார்ப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை அணி: 1 உபுல் தரங்க, 2 அவிஷ்க பெனாண்டோ, 3 ஓஷதா பெனாண்டோ, 5 குசல் மெண்டிஸ் (வி.கா.), 6 கமிந்து மெண்ஸ், 7 தனஞ்சய டி சில்வா, 8 திசர பெரேரா, 9 இசுரு உதான, 10 லசித் மாலிங்க (தலைவர்) 11 கசுன் ராஜத

தென்னாபிரிக்கா: 1 குயின்டன் டி கொக் (வி.கா.), 2 ரீசா ஹெண்ட்ரிக்ஸ், 3 ஏய்டன் மார்க்ரம், 4 பப் டூ பிளசிஸ் (தலைவர்), 5 ஜே.பி. டுமினி, 6 டேவிட் மில்லர், 7 அண்டில் பெலுக்வாயோ, 8 டேல் ஸ்டேன், 9 அன்ரிச் நோர்ட்ச், 10 லுங்கி கிடி , 11 டப்ரைஸ் ஷம்சி

Wed, 03/13/2019 - 17:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை