திமிங்கிலத்தின் வயிற்றில் 40 கிலோகிராம் பிளாஸ்டிக்

பிலிப்பைன்ஸ் கரையோரம் மாண்டுகிடக்கக் காணப்பட்ட திமிங்கிலத்தின் வயிற்றில் 40 கிலோகிராம் பிளாஸ்டிக் இருந்ததாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

பட்டினியால் வாடிய அந்தத் திமிங்கிலத்தின் வயிற்றில் அரிசி மூட்டைப் பை, காய்கறிகள் வாங்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் எனப் பலவிதமான பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன.

வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்திருந்ததால் அதனால் சாப்பிட முடியாமல்போனதாக நம்பப்படுகிறது. கடலை, பிளாஸ்டிக் குப்பைகளால் நிரப்பும் உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் உள்ளது.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பயன்பாடு அங்கு மிக அதிகமாக இருப்பது அதற்குக் காரணமாகும். அம்மாதிரியான பிளாஸ்டிக் கழிவுகளால், கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

கடந்த வருடம் ஜூன் மாதம் தாய்லாந்தில் இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் 80 கிலோ பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டது.

பெருங்கடலில் சேரும் கழிவுகளை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனில் ஒரு தசாப்தத்தில் மூன்று மடங்காக அது உயரும் என பிரிட்டன் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Wed, 03/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை