கிழக்கு மாகாணத்தில் 349பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 349பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் நேற்று (26) வழங்கப்பட்டது.இந்த வைபவம் திருகோணமலை உவர்மலை மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  

அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மொழி மூலம் 203பட்டதாரிகளுக்கும் திருகோணமலையில் சிங்கள மொழி மூலம் 74பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட்டது.  

மேலும் அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மொழி மூல இணைந்த மொழி (bilingual) ஆசிரியர் நியமனம் 7பேருக்கும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூல இணைந்த மொழி (bilingual) ஆசிரியர் நியமனம் 23பேருக்கும் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 18பட்டதாரிகளுக்கு தமிழ் மொழி மூல இணைந்த மொழி (bilingual) ஆசிரியர் நியமனம் 18பேருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 74சிங்கள மொழி மூல பட்டதாரிகளுக்கும் தமிழ் மொழி மூல இணைந்த மொழி (bilingual) ஆசிரியர் நியமனம் 16பேருக்கும் வழங்கப்பட்டன.  

இது தவிர, அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல இரு கல்விமாணி பட்டதாரிகளுக்கும் மட்டக்காப்பு மாவட்டத்தில் 3தமிழ் மொழி மூல கல்விமாணி பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டன.  

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் எல்.கே.ஜி.   முதுபண்டா, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் மற்றும் மாகாண சபையின் முன்னாள் அமைச்சரான ஆரியவதி கலபதி,முன்னாள் தவிசாளர் சந்திரதாச கலபதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.    

(கிண்ணியா மத்திய நிருபர்) 

Wed, 03/27/2019 - 08:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை