ஏற்றுமதி வருமானம் 34,000 மில்லியனாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு

இவ்வருடத்தில் ஏற்றுமதி வருமானம் 17,000 மில்லியனாக உள்ளதுடன் 2020இல் இதனை இரண்டு மடங்காக 34,000 மில்லியனாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தயா கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

அதேவேளை, இந்த வருட இறுதியில் எட்டரை இலட்சம் பேருக்கு சமுர்த்தி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கான ஏற்றுமதி வருமானம்... 03ம் பக்கத் தொடர்

நிதியொதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,  இந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில் 20,000 செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் 6,50,000 விதவைகள் உள்ளனர். எமது அமைச்சு அவர்களுக்கென தனியான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.  

எமது அமைச்சுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 87 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு பெற்றுக்கொண்டுள்ள கடன்களை மீள செலுத்த வேண்டுமானால் நாம் எமது பொருளாதாரத்தில் ஏற்றுமதி வருமானத்தை 50 வீதமாக அதிகரிப்பது அவசியம். இதுவே பிரதமரின் இலக்காகும்.    இந்த வருடத்தில் மாத்திரம் நாம் 17,000 மில். அமெரிக்க டொலரைக் கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் 5,600 மில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக செலுத்த வேண்டியுள்ளதுடன் 2,600 டொலர் மில்லியன் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது.  

சமுர்த்தி உதவி பெறுவோர் நாடடில் 14இலட்சம் ேபர் உள்ளனர். இந்த வருடத்தின் இறுதிக்குள் மேலும் 8  இலட்சம் பேருக்கு சமுர்த்தி உதவி வழங்கப்படவுள்ளது.  

ஜே. ஆர். ஜயவர்தன ‘ஜனசவிய’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கடந்த அரசாங்கம் அதனை பெயர் மாற்றி நடைமுறைப்படுத்தினர்.  அத்திட்டம் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரசியலாக்கப்பட்டிருந்தது.   500ஏ ற்றுமதிக் கிராமங்களை அமைத்து ஏற்றுமதித்துறையை முன்னேற்றுவதே எமது இலக்கு என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

(லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்)

 

Sat, 03/23/2019 - 08:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை