மக்கள் கூட்டத்திற்குள் சரக்கு வாகனம் புகுந்து 32 பேர் பலி

குவான்தமாலாவின் நெடுஞ்சாலை அருகே மக்கள் கூட்டத்திற்குள் சரக்கு வாகனம் புகுந்ததில் 32 பேர் கொல்லப்பட்டு மேலும் 9 பேர் காயமடைந்ததாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் மக்கள் கூட்டத்தை இடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக நம்பப்படுகிறது. ஓட்டுநரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

குவான்தமாலா ஜனாதிபதி ஜிம்மி மோராலஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் உற்றார், உறவினர்களுக்கு ட்விட்டர் பதிவின் மூலம் தமது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.

விபத்து நேர்ந்தபோது சரக்கு வாகனத்தில் விளக்கு வெளிச்சம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் விபத்தில் அவ்வட்டாரத்தின் சமூகத் தலைவர் ஒருவர் மாண்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குவன்தமாலாவில் அண்மைய ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான விபத்தாக இது பதிவாகியுள்ளது. 2013 ஆம் ஆண்டு குவன்தமாலாவின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் பஸ் வண்டி ஒன்று பள்ளத்தில் சரிந்த விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.

Fri, 03/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை