வெளிநாடு செல்ல முயன்ற 30 இலங்கையர்கள் ஆழ்கடலில் கைது

சட்டவிரோதமாக ஆழ்கடல் வழியாக வெளிநா​ெடான்றுக்கு சென்றுகொண்டிருந்த 30 இலங்கையர் தென் பகுதி ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து தென்பகுதி ஆழ்கடலில் காலி வெளிச்ச வீட்டிலிருந்து 80 கடல் மைல் தொலைவில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத ஆட்கடத்தலை தடுக்கும் நோக்குடன் தென் மாகாண கடற்படைத் தளத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற இரண்டு அதிவேக கடற்படை படகில் சென்ற கடற்படை வீரர்களே 30 பேரையும் கைது செய்துள்ளனர்.

கடற்படையினரால் கைதாகியுள்ள 30 பேரும் ஆண்கள் என்பதுடன் மருத்துவ  பரிசோதனைக்குட்படுத்தி காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக ஆழ்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு செல்ல முற்படுவோர் கைது செய்யப்படுவதுடன், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடும் தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள் என கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் சட்டவிரோத ஆட்கடத்தல் தடுப்புக்காக கடற் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் எவரும் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முடியாது என்று தெரிவித்தார்.

 

Fri, 03/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை