அமெரிக்காவில் 3 ,000 இலங்கைத் தாதியருக்கு தொழில்வாய்ப்பு

அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார்.

இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்துள்ள கண்டி பொது வைத்தியசாலையில் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே நேற்று முன்தினம் (08) தாதியர் சேவைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தவிர மேலும் 25தாதியர்கள் அமெரிக்கா செல்வதற்கான பயிற்சிகளில் தற்சமயம் ஈடுபட்டுள்ளனர்.

American company, Michigan-based Karma Services நிறுவனத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 2016ஆம் ஆண்டில் கைச்சாத்திட்ட உடன்படிக்கைக்கு அமைவாக 3 000பேருக்கு இந்த வேலை வாய்ப்பு கிட்டவுள்ளது.

இலங்கை தாதியர்களுக்கு அமெரிக்க மாதாந்த சம்பளம் 5ஆயிரம் அமெரிக்க (US $ 5000) டொலர்களாகும். அத்தோடு அமெரிக்காவிற்கு தங்கள் குடும்பத்தை அழைத்துச் செல்லவும் முடியும். இலங்கை பணியாளர்களுக்காக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இது அமைந்துள்ளது.

அமெரிக்க மருத்துவமனையில் பணியாற்றுவதற்கு இரண்டு வருட அனுபவம் மற்றும் தற்போது சிறப்பாக தாதியர் தொழிலில் ஈடுபடுதல் வேண்டும் என்பது தகுதியுடையதாக கருதப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர் தாதியர் பட்டப்படிப்பை கொண்டிருக்க வேண்டும் அல்லது நான்கு வருடங்களைக் கொண்ட தாதியர் டிப்ளோமாதாரியாக இருக்க வேண்டும் என்பதுடன் அமெரிக்க தரத்துடனான ஆங்கில IELTS தரப் பரீட்சையில் சித்தியெய்திருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பிக்கும் போது 45வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

இந்த வேலைத்திட்டம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி, சந்தைப்படுத்தல் மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவினால் முன்னெடுக்கப்படுகிறது. 

பதிவு செய்யப்பட்ட தாதியர்கள் மேலதிக தகவல்களுக்கு உதவி பொது முகாமையாளர், சந்தைப்படுத்தல் மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவு, 0112791814, 0112884771என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

Sun, 03/10/2019 - 12:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை