நாடளாவிய ரீதியில் 25 நகரங்கள் 2ஆம் நிலை நகரங்களாக அபிவிருத்தி

நாடளாவிய ரீதியில் உள்ள 25 நகரங்கள் இரண்டாம் நிலை நகரங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள், உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.  

மாவட்டத்திற்கொரு நகரம் என்ற அடிப்படையில் மூன்றாண்டு காலத்திற்குள் சகல வசதிகளையும் கொண்டதாக மேற்படி நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இரண்டாம் நிலை நகர அபிவிருத்திக்கென ஆசிய அபிவிருத்தி வங்கி 200மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.  

இத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் ஐந்து உள்ளூராட்சி பிரதேசங்களைச் சேர்ந்த நகரங்களும், கிழக்கு மாகாணத்தில் மூன்று உள்ளூராட்சி பிரதேச நகரங்களுமாக 08இரண்டாம் நிலை நகரங்களாக அபிவிருத்தி செய்யப்படும்.  

மேல் மாகாணம், தென் மாகாணம், மத்திய மாகாணம் என்பவற்றில் இருந்து தலா 03உள்ளூராட்சி பிரதேச நகரங்களும்,வடமேல், வட மத்தி, ஊவா, சப்ரகமுவ ஆகிய மாகாண உள்ளூராட்சி பிரதேசங்களில் இருந்து தலா இரண்டு நகரங்களும் 17நகரங்கள் இரண்டாம் நிலை நகரங்களாக அபிவிருத்தி செய்யப்படும்.

(சாய்ந்தமருது குறூப் நிருபர்) 

 

Wed, 03/20/2019 - 10:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை