அமெரிக்காவின் அலபாமாவில் பலத்த சூறாவளி: 23 பேர் பலி

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தை தாக்கிய பலத்த சூறாவளியால் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல வீடுகளும் சேதமடைந்திருக்கும் நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள லீ கெளண்டியில் கடந்த ஞாயிறு இரவு தாக்கிய சூறாவளியில் மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டதோடு வீடுகள், வணிக நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக, லீ கவுண்டியின் பீராகார்ட் நகரில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால், லீ கவுண்டியில் சுமார் 5000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மீட்புப் பணியாளர்கள் கட்டடச் சிதைவுகளிலிருந்து காயமடைந்தோரையும் உயிரிழந்தோரின் உடல்களையும் மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வானிலை மேலும் மோசமாகலாம் என்று அலபாமாவின் ஆளுநர் கே ஐவே ட்விட்டரில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார். மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தைக் கையாள, அலபாமா மாநிலத்திற்கான அவசர நிலையை நீட்டிக்கப்போவதாக கே கூறினார்.

இதற்கு முன்னர் இம்மாதிரியான நிலையை எதிர் கொண்டதில்லை என்று அலபாமா பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tue, 03/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை