அரசு வழங்கிய வாக்குறுதிகளில் 20 செயற்திட்டங்களே இன்னும் எஞ்சியுள்ளன

64 வீதமானவை நடைமுறையில்

நாட்டில் அரசியல் சதி இடம்பெற்ற காலப்பகுதியில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட இழப்பு கணிப்பிட முடியாதது. அதற்கு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துக்கு பொறுப்புக் கூற வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் நிறைவேற்றுவதாக வழங்கிய வாக்குறுதிகளில் இன்னும் 20 செயற்திட்டங்களே நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகவும் எஞ்சியவற்றுள் 28 சதவீதமானவை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் 64 சதவீதமான செயற்திட்டங்கள் நடைமுறையிலிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 02 ஆம் வாசிப்பு மீதான 05 ஆம் நாள் விவாதம் நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும்பொதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது-

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் தொழில் வாண்மையாளர்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் 3 சதவீத தொழில்வாண்மையாளர்களே உள்ளனர். எமது அரசாங்கத்தில் நாம் இதுவரை 34 ஆயிரத்து 476 பேருக்காக 6 ஆயிரத்து 536 கோடி ரூபாவை கடனாக கொடுத்துள்ளோம்.

நிதி அமைச்சர் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டம் வெறும் கனவென்று பலரும் கூறி வருகின்றனர். நாம் வாக்குறுதியளித்தவற்றுள் 28 சதவீதமான திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். மேலும் 64 சதவீதமான வேலைத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் 20 செயற்திட்டங்களே நிறைவேற்றப்படவுள்ளன. நீர்ப்பாசனம் வீடமைப்பு போன்ற செயற்திட்டங்கள் விரைவில் நிறைவு செய்யப்பட முடியாதவை.அவற்றுக்கு நீண்ட காலம் தேவைப்படும்.

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

Tue, 03/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை