2019பட்ஜட்; ஐ.ம.சு.கூ. எதிராக வாக்களிக்க தீர்மானம்

2019ஆம் ஆண்டுக்கான வரவு –-செலவுத்திட்டத்தில் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

2019ஆம் ஆண்டு வரவு -செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாவது வாக்கெடுப்பு, இன்று (12) மாலை 5மணிக்கு இடம்பெறவுள்ளது. இதற்கமையவே, இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின்போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Tue, 03/12/2019 - 15:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை