எகிப்தில் 2000 ஆண்டு கல்லறை மீட்கப்பட்டது

எகிப்து துறைமுக நகரான அலெக்சாண்ட்ரியாவில் உள்ள 2000 ஆண்டுகள் பழமையான பிரபல நிலத்தடி கல்லறையை உயர்ந்து வரும் நீரில் இருந்து பாதுகாக்கும் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

எகிப்தில் உள்ள மிகப்பெரிய கிரேக்கோ-ரோமன் கல்லறையான கோம் அல் சொகாபா, 1900 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது தொடக்கம் கடல் நீரால் ஆபத்து இருந்து வந்தது.

எகிப்து, கிரேக்க மற்றும் ரோமானிய கலைகளின் கலவையாக அமைந்த இந்தக் கல்லறை கி.பி. முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க உதவி நிறுவனத்தின் உதவியோடு நீர்மட்டம் உயர்வதில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த கல்லறையில் பாரிய வடிகால் திட்டம் ஒன்று 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் இந்த தலத்திற்கு 100 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வந்த அச்சுறுத்தல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக எகிப்து தொல்பொருள் அமைச்சர் காலித் அல் அனானி கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

Tue, 03/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை