நாட்டில் வெப்பநிலை சாதாரண அளவிலும் 2 - 4 பாகை அதிகம்

RSM
நாட்டில் வெப்பநிலை சாதாரண அளவிலும் 2 - 4 பாகை அதிகம்-Island Temperature 2-4 Degree High

நுவரெலியா, பதுளையில் 2 - 3 பாகை குறைவு

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல இடங்களில் இன்று (31) பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, கேகாலை மாவட்டத்தின் மாலிபொட பகுதியில் அதிகூடிய அளவில் 33.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பெறப்பட்ட வெப்பநிலை பதிவுகளின் அடிப்படையில் ஆகக் கூடுதலாக, வவுனியாவில் 37.3 பாகை வெப்பநிலையும், நுவரேலியாவில் 7.7 பாகை வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் பகல் வேளையில், சாதாரணமாக நிலவும் வெப்ப நிலையை விட வவுனியால் சுமார் 4 பாகை வெப்பநிலை அதிகமாகவும், அநுராதபுரம் கட்டுகஸ்தோட்டை, குருணாகல், மஹா இலுப்பள்ளம உள்ளிட்ட பிரதேசங்களில் வெப்பநிலை 3 பாகை அதிகமாகவும், அம்பாந்தோட்டை யாழ்ப்பாணம், இரத்மலானை, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் வெப்பநிலை 2 பாகைக்கும் அதிகமாக காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பகல் வேளையில் வெப்பநிலை அல்லது சாதாரண அளவில் காணப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பகலில் சூழல் வெப்பநிலை, சாதாரண வெப்பநிலையிலும் சற்று அதிகமாக அல்லது குறைவாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரவில் கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை, இரத்மலானை, இரத்தினபுரி, வவுனியா ஆகிய பகுதிகளில் வெப்பநிலை சாதாரண அளவிலும் பார்க்க 2 பாகையிலும் அதிகமாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரேலியாவில் மூன்று பாகைக்கும் குறைவாகவும், பதுளையில் இரண்டு பாகையிலும் குறைவாகவும் காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இரவு வேளையில், சூழல் வெப்பநிலை சாதாரண அளவிலும் சற்று அதிகமாக அல்லது குறைவாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Sun, 03/31/2019 - 14:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை