வேலையின்மை 16% உயர்வு; பட்டதாரிகளுக்கு தொழில் இல்லை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் தேவைப்படும் போது மட்டுமே அரசாங்கம் வடக்கு குறித்து பேசுவதாக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார். பிரதமரின் கீழுள்ள அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,.

கடந்த 4 வருட காலத்தில் அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. 10,000 தொழில் வாய்ப்பு, சிறிய கார், பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு, நாட்டை சொர்க்கபுரியாக மாற்றுதல் என வழங்கப்பட்ட வாக்குறுகளில் எதுவும் நிறைவேறவில்லை.

20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட வயதினருக்கிடையிலான வேலையின்மை 16 வீதம் உயர்ந்துள்ளது. 60,000 பட்டதாரிகள் தொழில் வாய்ப்பின்றியுள்ளனர். இவர்களுக்கு கண்ணீர்ப்புகையும் தடியடியும் தான் தீர்வாக வழங்கப்படுகிறது. 22 மில்லியன் சனத்தொகையில் ஒரு மில்லியன் பேர் வறுமையில் வாழ்கின்றனர்.

இளைஞர் சேவைகள் மன்றம் சிறிகொத்த அலுவலகமாக மாறியுள்ளது. இளம் எம்.பிகள் இருக்கையில் இளைஞர் விவகார அமைச்சராக பிரதமர் செயற்படுகிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் தேவைப்படும் போது மட்டுமே அரசாங்கம் வடக்கு குறித்து பேசுகிறது.

வடக்கில் ஒரு கைத்தொழில்சாலையையோ பிரதான வீதியையோ வேறு அபிவிருத்தியையோ இந்த அரசாங்கம் செய்துள்ளதா?மதுபான தொழிற்சாலை மாத்திரம் தான் உருவாக்கியது. மக்களின் கடன் சுமை அதிகரித்துள்ளது. ஆனால் அரசாங்கம் இன்னும் இன்னும் கடன்களை அள்ளி வழங்குகிறது. கடந்த 4 வருட காலத்தில் அரசாங்கம் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறது. எஞ்சிய சில மாதங்களிலாவது மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஷம்ஸ் பாஹிம்.மகேஸ்வரன் பிரசாத்

Fri, 03/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை