பெரும்போகத்தில் 1,50,000 மெற்றிக்தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய அரசு திட்டம்

பெரும்போகத்தில் ஒரு இலட்சத்து 50ஆயிரம் மெற்றிக்தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இதுவரை 16ஆயிரத்து 560மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார்.   நெல் கொள்வனவுக்கான நடமாடும் சேவையை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார்.   

நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியங்களுக்கு நெல்லைக் கொண்டுசெல்ல முடியாத விவசாயிகளுக்காக இந்த நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தாம் கடந்த காலங்களில் பல மாவட்டங்களுக்கு விஜயம் செய்த போது நெல்லை விற்பனை செய்வதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் தமது பிரச்சினைகளை அறிவிப்பதற்காக அடுத்த வாரத்தில் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்த அவர், நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருவதாகவும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் அனைத்துக் களஞ்சியசாலைகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த போகத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அதற்குத் தேவையான நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.(ஸ)

Wed, 03/20/2019 - 08:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை