1.4 மில்லியன் டொலருக்கு விலைபோன பந்தய புறா

புறா பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரு புறா வரலாறு காணாத வகையில் 1.4 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டுள்ளது.

புறாவை ஏலத்தில் விடும் தளமான பிபா ‘அர்மாண்டோ’ எனும் புறாவை அண்மையில் ஏலத்தில் விட்டது. அதிக தூரம் கடந்த மிகச்சிறந்த பெல்ஜியம் புறா எனக்கூறப்படும் அர்மாண்டோவை ‘புறாக்களின் லுயிஸ் ஹமில்டன்’ என அழைக்கின்றனர்.

லுயிஸ் ஹமில்டன் ஐந்து முறை பார்முலா வன் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பிரிட்டனைச் சேர்ந்த கார் பந்தய வீரராவார்.

இந்த புறா ஏலத்தில் விற்கப்படுவதற்கு முன்னதாக ஒரு புறா அதிகபட்சமாக 376 ஆயிரம் யூரோவுக்கு விற்கப்பட்டிருந்ததே சாதனையாக இருந்தது.

அர்மாண்டோவுக்கு வயது ஐந்துதான். தற்போது ஓய்வுக்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் அந்த புறா ஏற்கனவே சில குஞ்சுகளுக்கு ‘அப்பா’ ஆகிவிட்டது.

சீனாவைச் சேர்ந்த இரு கொள்வனவாளர்களிடையே ஏற்பட்ட கடும் போட்டிக்குப் பின் இந்தப் புறா விலை போனதாக பிபா தளத்தின் நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Wed, 03/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை