சொகுசு கப்பலில் கோளாறு: நடுக்கடலில் 1300 பேர் மீட்பு

நோர்வே கடல் பகுதியில் சொகுசு கப்பல் ஒன்று செயலிழந்ததை அடுத்து கப்பலில் இருந்த சுமார் 1300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கப்பலில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதாகவும் கப்பலில் இருந்த அனைவரும் கரைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடுமையான காற்று மற்றும் உயர்ந்தெழும் அலைகளுக்கு மத்தியில் விக்கிங் ஸ்கை என்ற அந்த கப்பலில் இருந்து உதவி கோட்டு அழைப்பு வந்ததாக நோர்வே கடல் மீட்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஐந்து ஹெலிகொப்டர்கள் மற்றும் பல கல்லப்பல்கள் இந்த வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடுமையான வானிலையால் மீட்புப் படகுகள் அதனைச் சென்றடைய முடியவில்லை. அதனையடுத்து ஹெலிகொப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

Mon, 03/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை