உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 130ஆவது இடத்தில்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 130 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுவதுடன் 156 நாடுகளை உள்ளடக்கிய இப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 

நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரம், ஆயுட்காலம், சமூக ஒத்துழைப்பு மற்றும் இலஞ்ச ஊழல் ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  

சர்வதேச மகிழ்ச்சி தினத்தையொட்டி நேற்றைய தினம் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதன்மை இடத்தை பின்லாந்து பெற்றுக்கொண்டுள்ளது. இந்நாடு அப் பட்டியலில் இரண்டாவது தடவையாக முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை நோர்டிக் நாடுகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா இப் பட்டியலில் பின்னடைவை சந்தித்து வருகிறது. முன்பு 14 ஆவது இடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது 19 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. (ஸ)

Thu, 03/21/2019 - 10:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை