பிரபலமான '113வது வடக்கின் சமர்' சமநிலையில் நிறைவு

பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ் புனித யோவான் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான 2019ஆம் ஆண்டின் '113வது வடக்கின் மாபெரும் சமர்' கிரிக்கெட் போட்டி அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இரண்டு யாழ் கல்லூரிகளுக்கும் இடையிலான இந்த பிரபலமான மாபெரும் கிரிக்கெட் போட் மார்ச் மாதம் 7,8 மற்றும் 9ஆம் திகதிகளில் வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு வந்தது. இறுதி இன்னிங்ஸில் 232 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில், முதலாவது மற்றும் மூன்றாவது இன்னிங்ஸில் புனித யோவான் கல்லூரியும், இரண்டாவது மற்றும் நான்காவது இன்னிங்ஸில் யாழ் மத்திய கல்லூரியும் துடுப்பெடுத்தாடின.

தமது துடுப்பாட்டத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் இரண்டாவது இன்னிங்ஸில் புனித யோவான் கல்லூரி 9 விக்கெட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இரண்டு கல்லூரிகளில் இருந்தும் பல திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன. சிறந்த துடுப்பாட்ட வீரர் (ரி. டினோஷன்), சிறந்த களத்தடுப்பாளர் (ரி. வினோஜன்), மற்றும் சிறந்த விக்கெட் காப்பாளர் (கே. சபேசன்) என அதிக விருதுகளை புனித யோவான் கல்லூரி பெற்ற நிலையில், யாழ் மத்திய கல்லூரியைச் சேர்ந்த வி. விஜயகாந்த் சிறந்த பத்துவீச்சாளராகவும், கே. இயலரசன் சிறந்த சகல துறை ஆட்டக்காரராகவும் தெரிவாகினர். போட்டியின் சிறந்த வீரருக்கான விருதையும் யாழ் மத்திய கல்லூரியைச் சேர்ந்த வி. விஜயகாந்த் வென்றார்.

மாபெரும் வெற்றிக் கிண்ணத்தை இலக்கு வைத்து இரு அணிகளும் முழு முயற்சியுடன் விளையாடியமையைக் காணக் கூடியதாகவிருந்தது. துரதிஷ்டவசமாக, வெற்றி தோல்வியின்றி வடக்கின் மாபெரும் சமர் நாற்பதாவது தடவையாக நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Tue, 03/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை