நைஜீரியாவில் கட்டடம் இடிந்து 10 பேர் பலி

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் பாடசாலை ஒன்று நடத்தப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நான்கு மாடிகள் கொண்ட கட்டிடத்தின் மேல் மாடியில் இந்த பாடசாலை இயங்கி வந்திருப்பதோடு 100க்கும் அதிகமான மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் இருக்கும் சுமார் 40 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அந்தக் கட்டிடம் ஏற்கனவே பாழடைந்து போயிருந்ததாகவும், அதனை இடித்துத் தள்ளத் திட்டம் இருந்ததாகவும் லாகோஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளுர் நேரப்படி நேற்றுக்காலை 10 மணி அளவில் இந்த கட்டிடம் இடிந்துள்ளது. உயிர் தப்பியவர்களை தேடி மீட்பாளர்கள், ஊர் மக்கள் மற்றும் குடும்பத்தினர் அங்கு குவிந்துள்ளனர்.

2014 இல் லாகோஸ் நகரில் கட்டிடம் இடிந்து 116 பேர் கொல்லப்பட்டதோடு தெற்கு நைஜீரியாவில் தேவாலயம் ஒன்றின் கூரை விழுந்து 2016 ஆம் ஆண்டு 100க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

Fri, 03/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை