போதைப்பொருள் ஊடுருவுவதை தடுக்க கடும் பாதுகாப்பு ஏற்பாடு

மலையக பெருந்தோட்டத்தேயிலை மலைகளுக்கூடான வீதிகளை பயன்படுத்தி போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க பெருந்தோட்டப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக கைத்தொழில்துறை இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

தேயிலை மலைகளுக்கூடான வீதிகளை பயன்படுத்தி போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுவருவது தொடர்பாக கடும் விசனத்தையும் அவர் தெரிவித்தார். 

பதுளை, கிளேன்பீல் தோட்டப் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்நாட்டில் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவரக்கூடிய நபர்கள் கடந்த காலங்களில் நகர் பகுதிகளை பிரதான இடங்களாக கொண்டு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  இன்று அவ்வாறான போதைப்பொருட்களை மலையகப் பிரதேசங்களிலும் விற்பனை செய்து பெருந்தோட்டச் சமூகத்தையும் இதற்கு அடிமையாக்கும் செயல்களை முன்னெடுக்கின்றனர். 

குறிப்பாக மலையக பெருந்தோட்டங்களை உள்வாங்கப்பட்ட நகர் பகுதிகளில் ஏதோ ஒரு மூலையில் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ள நபர்கள் அவர்களின் பாதுகாப்பு கருதி தோட்டப்பகுதிகளுக்குள் நுழைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அவதானத்துடனும், நமது பிள்ளைகளின் அசைவுகளிலும் அவதானம் செலுத்த வேண்டும்.

அத்துடன், தோட்டங்களுக்கு உள்வாங்கும் வீதிகளின் சந்திகளில் சந்தேகத்திற்கு இடமாக நபர்கள், மற்றும் முச்சரக்கர வண்டிகள் என காணப்படும் பட்சத்தில் அது தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரின் கவனங்களுக்கும் கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹற்றன் சுழற்சி நிருபர் 

Fri, 02/15/2019 - 10:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை