யானைகளைப் பாதுகாப்பதில் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தவறிழைப்பு

கடந்த பல வருடங்களில் யானைகளைப் பாதுகாப்பதில் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் பல தவறுகளை செய்துள்ளதாக கணக்காளர் நாயகத்தின் அறிக்கையொன்று கூறுகிறது. 

யானைகள் பாதுகாப்புத் தொடர்பாக கணக்காளர் நாயகம் கடந்த வருடம் அறிக்கையொன்றை தயாரித்திருந்தார். 

கைப்பற்றப்பட்டதன் மூலம் அல்லது கொல்லப்பட்டதனால் யானைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் கூறியிருந்த போதிலும், அந்த எண்ணிக்கை தவறு என்று கணக்காளர் நாயகத்தின் அறிக்கை கூறுகிறது. 

யானைக் குட்டிகளை சட்டவிரோதமாகப் பிடிப்போர் மீண்டும் தீவிரமாகச் செயற்படத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பான சட்டம் முறையாக அமுல்படுத்தப்படாமை காரணமாகவே இவர்களின் செயற்பாடு அதிகரித்துள்ளது.   வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகளும் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாக கணக்காளர் நாயகத்தின் அறிக்கை கூறுகிறது. 

அத்துடன், 54 வனவிலங்கு வலயங்களில் குப்பைகள் கொட்டப்பட்டுவதாகவும் அந்த இடங்களில் 300க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றி வருவதாகவும் இவ்வாறான குப்பைகளை உண்பதால் நோய்க்கு உள்ளாகும் யானைகள் இறந்துவிடுவதாகவும் தெரியவந்துள்ளது. அந்தக் குப்பைகளில் பொலித்தீன்கள். ஷொப்பிங் பேக்குகள், பிளாஸ்டிக் போத்தல்கள் இருப்பதாகவும் இவற்றை உண்பதனாலேயே யானைகள் உயிரிழப்பதாகவும் இந்த நிலைமையை மின்சார வேலி அமைப்பதால் தடுப்பதற்கு உள்ளூராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு இருந்தும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிடுகின்றனர் என்றும் கணக்காளர் நாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   

Tue, 02/12/2019 - 11:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை