மண் அகழ்வுக்கான தடையை நீக்குவதுபற்றி ஆளுநருடன் கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்டத்தில் மண் அகழ்வுக்கான இடைக் கால தடை உத்தரவை அடுத்து மீண்டும் அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில், நேற்று (25) திங்கட் கிழமை மாலை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது.

இக் கலந்துரையாடலின் போது இடை நிறுத்தப்பட்ட மண் அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், முப்படையின் உயரதிகாரிகள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதில் உரையாற்றிய துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்,

இடை நிறுத்தப்பட்ட மண் அகழ்வுப் பணிகளை உள்ளூர் அகழ்வாளர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் வழங்குவதாயின் வழங்க வேண்டும் எனவும், வெளி மாவட்டத்தை சேர்ந்தோர்களுக்கு வழங்குவதை தடை செய்ய வேண்டும்.

அத்தோடு பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட குறைந்த அளவிலான அனுமதிக்கான பத்திரங்களைக் கூடுதலாக 100 கியூப் வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்றார். இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே, முன்னாள், மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார , முன்னாள் கிழக்கு மாகாண தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ்,

புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் பெரேரா, உட்பட முப்படைகளின் உயரதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள், மாவட்ட மண் அகழ்வாளர்கள் சங்கம் என பலர் கலந்து கொண்டனர்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Tue, 02/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை