கொங்கோவில் முன்னாள் அமைச்சர்களுக்கும் சம்பளம்

கொங்கோ ஜனநாய குடியரசின் அமைச்சர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்கும் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“அதிகாரிகள் பொருளாதார ரீதியில் வளமாக இல்லை” என்று இதனை நியாயப்படுத்தி கடந்த திங்கட்கிழமை அரசு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

வெளியிடப்பட்டிருக்கும் இரண்டு ஆணைகளில், முன்னாள் அமைச்சர்களுக்கு குறைந்தது 2,000 டொலர் பெறுமதியான கொடுப்பனவுகளை வழங்க குறிப்பிடப்பட்டிருப்பதோடு இது பரந்த அளவில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

கொங்கோ மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் வறுமையில் வாழ்கின்றனர்.

அமைச்சர்களுக்கு அடிப்படைத் தேவைகள். குறிப்பாக உணவு, உறைவிடம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கான குறைந்தபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக விடைபெறவிருக்கும் அரசு குறிப்பிட்டுள்ளது.

தனது பதவிக்காலத்தை முடித்துக் கொள்ளவிருக்கும் பிரதமர் ப்ரூனோ ட்ஷிபாலா கடந்த நவம்பரில் இந்த இரண்டு ஆணைகளிலும் கைச்சாத்திட்டபோதும் அண்மையிலேயே இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதன் முதல் ஆணையில் முன்னாள் பிரதமர் ஒருவருக்கு தற்போதைய பிரதமரின் சம்பளத்தில் 30 வீத சம்பளம் வழங்க அனுமதிக்கப்பட்டிருப்பதோடு இரண்டாவது ஆணையில் முன்னாள் அமைச்சர்களுக்கு இவ்வாறு சம்பளம் வழங்கவும் கூறப்பட்டுள்ளது.

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை