பாராளுமன்ற மின்தூக்கி செயலிழப்பு

12 எம்பிக்கள்
20 நிமிடங்கள்
சிக்கித்தவிப்பு

சபை அமர்வில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற மின்தூக்கியில் பயணித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் சுமார் 20 நிமிடங்கள் வரை அதற்குள் சிக்கி வெளியில் வர முடியாமல் தவித்த சம்பவம் நேற்று (07) சபையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பில் எம்.பிக்கள் பலரும் சபாநாய கரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இது தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக் கை எடுப்பதாக சபாநாயகர் அறிவித்தார். தேவை ஏற்பட்டால் புதிய மின்தூக்கியை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் நேற்று காலை 10.30 மணிக்கு சபாநாயாகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடியது. இதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தரைத்தளத்தில் இருந்து 2 ஆவது மாடிக்கு செல்வதற்காக 12 எம்.பிக்கள் மின்தூக்கியில் ஏறியுள்ளனர். இதில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹார,எம்பிக்களான தினேஷ் குணவர்தன, உதவி கோரி மின்தூக்கியின் கதவையும் தட்டியுள்ளனர். உதவிக்கு எவரும் வராததோடு சில நிமிடங்கள் கழித்தே அதிகாரிகள் அங்கு வந்து சிக்கியிருந்த எம்.பிக்களை பாதுகாப்பாக மீட்டதாக அறிய வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் சபையில் கடும் விவாதம் ஏற்பட்டதுடன், இது சதியாக இருக்கலாம் என்றும் எதிரணியினர் குற்றஞ்சாட்டி, சம்பந்தப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்துமாறும் கோரினர்.

அரசியலமைப்பு பேரவை தொடர்பான சபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து சபையில் குழப்ப நிலை ஏற்பட்டு சபை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் சபை கூடிய போது மின்தூக்கி விவகாரம் தொடர்பாக எம்.பிக்கள் பலரும் கருத்து வெளியிட்டனர்.

----

முதலில் கருத்துத் தெரிவித்த தினேஷ் குணவர்தன எம்.பி

நான் உட்பட 12 எம்.பிக்கள் சபைக்கு வருகையி ல் திடீரென மின்தூக்கி செயலிழந்தது. அதில் ஒட்டப்பட்டுள்ள அறிவுறுத்தல் படி தொலை பேசியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்க முயன்றும் எவரும் அழைப்பிற்கு பதில் வழங் கவில்லை.இதனால் தொலைபேசியில் அறிவிக்கும் முயற்சி தோல்வியடைந்தது.

நான் பாராளுமன்றத்திற்கு வந்த காலத்தி லிருந்து இவ்வாறான சம்பவம் நடந்தது கிடையாது. பாராளுமன்ற விவகார குழு தலைவர் ரஞ்சித் அலுவிஹாரவும் எம்முடன் இருந்தார். எம்மை மின்தூக்கிக்குள் அடைத்து கொலை செய்யும் சதி இது. பாராளுமன்றத்திற் காக பல இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்படுகிறது. மின்தூக்கியை முறையாக நிர்வகிக்கவோ எம்.பிக்கள் 25 நிமிடமாக சிக்கியிருந்தும் அதிகாரிகளால் பாதுகாக்க முடியாமல் போனது. மின்னணு வாக்களிப்பு இயந்திரம் பல காலம் செயலிழந்திருந்தது.அதனூடாக நடந்த வாக்கெடுப்பில் தவறான முடிவுகள் வெளியி டப்பட்டன.

இது தொடர்பில் அதிகாரிகள் சபாநாயகருக்கு தவறான தகவல்களை வழங்கியிருந்தனர். எம்.பிக்கள் மாத்திரம் பயன்படுத்தும் மின்தூக்கியிலே இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.சபாநாயகரும் இதனையே பயன்படுத்துகிறார். கஷ்டம் என்றாலும் அவர் படிக்கட்டுகளை பயன்படுத்துவது நல்லது.

------

விமல் வீரவன்க எம்.பி

கூடுதலானவர்கள் ஏறினால் மின்தூக்கியில் மணி ஒலி கேட்கும். ஆனால் அவ்வாறு எந்த சத்தமும் கேட்கவில்லை.அவசர தொலைபேசி இலக்கத்திற்கு பதில் வழங்க எவருமில்லை. உதய கம்மம்பில தவிர்ந்த சகல கொழும்பு மாவட்ட எம்.பிக்களும் மின்தூக்கிக்குள் சிக்கியிருந்தனர். ஏதும் அசம்பாவிதம் நடந்திருந்தால் கம்மம்பில மட்டும் தான் எஞ்சியிருப்பார். சபாநாயகர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட இருப்பதால் உங்களையும் மின்தூக்கியில் சிக்கவைக்கலாம்.

-------

சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல

மின்தூக்கிக்குள் எம்.பிக்கள் சிக்கியது பாராதூரமான விடயமாகும். இந்த விடயத்தை இன்னும் ஆழமாக பார்க்க ​வேண்டும். இவ்வாறு ஏதும் விபரீதம் நடந்தால் அதற்கு பொறுப்புக் கூற எவரும் கிடையாது. தொலைபேசி அழைப்பிற்கு 15 நிமிடத்திற்கு பின்னர் தான் பதில் வழங்கப்பட்டுள்ளது. எம்.பிக்களுக்கு 2 இலட்சம் ரூபா தான் காப்புறு தி செய்யப்பட்டுள்ளது.ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருக்கையில் புதிய மின்தூக்கி கொள்வனவு செய்ய, நிதி ஒதுக்க உடன்பட்டிருந்தார். தவறு செய்தவர்கள் யார்? என்பது அறிவிக்கப்பட வேண்டும்.

------

பந்துல குணவர்தன எம்.பி

மின்தூக்கியில் நானும் சிக்கியிருந்தேன். இது மிகவும் மோசமான அனுபவமாகும். இதில் கட்சித் தலைவர்கள் பலர் சிக்கியிருந்தார்கள். மின்விசிறி செயலிழந்து வியர்க்கத் தொடங்கியது.கதவை தட்டினாலும் கூட யாரும் வரவில்லை.

---

சபாநாயகர் கரு ஜயசூரிய

நடந்த பாரதூரமான விடயம் குறித்து கவலையடைகிறேன்.உரிய நிறுவனத்தை அழைத்து பேசுமாறு அறிவித்துள்ளேன். தேவை ஏற்பட்டால் மின்தூக்கியை மாற்ற முடியும்

----

சமிந்த விஜேசிறி எம்.பி

கடந்த நவம்பர் மாதம் பிரதமர் செல்கையிலும் மின்தூக்கி செயலிழந்தது.இது அவரை மின்தூக்கிக்குள் சிக்கவைக்கும் சதியாக இருக்கும். மற்றவர்களுக்கு வெட்டிய குழியில் தாமே விழுந்துள்ளனர்.

----

சந்திரசிறி கஜதீர எம்.பி

எமக்கு மரண பீதி ஏற்பட்டது. இவ்வாறு ஏதும் அனர்த்தம் நடந்தால் சபாநாயகரிடம் இருந்து நஷ்டஈடு பெறும் முறையொன்று கொண்டு வரப்பட வேண்டும்.

----

சந்திம வீரக்கொடி எம்.பி

பாராளுமன்றம் வரும் பாடசாலை மாணவர்கள் கூட மின்தூக்கியை பயன்படுத்துகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை மாணவர்கள் மின்தூக்கியை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

---

தயாசிறி ஜெயசேகர எம்.பி

எம்.பிக்களின் காப்புறுதி தொகையை தயவு செய்ய அதிகரிக்க வேண்டாம். அதனை விட எம்.பிக்கள் மூச்சுத்திணறி இறப்பது மேல் என மக்கள் நினைப்பார்கள்.

---

பீல்ட்மார்சல் சரத் பொன்சேக்க எம்.பி

மின்தூக்கி என்பது இயந்திரம். செயலிழக்காத இயந்திரம் எங்கும் கிடையாது.விமானங்கள் கூட விழுந்து விடுகின்றன. அவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டும். மின்தூக்கியில் பயணிக்க பயமாக இருந்தால் படிக்கட்டை பயன்படுத்த வேண்டும்.

---

ரஞ்சித் சொய்சா எம்.பி

தொழில்நுட்ப குறைபாடுகளை தீர்க்க வேண்டும். எம்.பிக்களுக்கு தற்பொழுது மோசமான காலம் ஏற்பட்டுள்ளது.

--

முஜீபுர் ரஹ்மான் எம்.பி

எம்.பிக்களுக்கு பய உணர்வு வந்துள்ளது.இனி மிளகாய்ப்பொடி தாக்குதல், ஒலிவாங்கி உடைப்பு என்பன ஏற்படாது.

--

அசூ மாரசிங்க எம்.பி

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த எம்.பிகளுக்கு எமது கவலையை தெரிவிக்கிறேன்.

-

சபாநாயகர்

நடந்த சம்பவம் தொடர்பில் முழுமையாக கவனம் செலுத்தப்படும். வேண்டுமென்றே இது நடக்கவில்லை. இதற்கான பொறுப்பை பாராளுமன்றம் ஏற்கிறது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Fri, 02/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை