கார்ல் மார்க்ஸ் கல்லறை சுத்தியலால் தாக்கி சேதம்

ஜெர்மனி அரசியல் தத்துவவாதியும் புரட்சிகர சோசலிசவாதியுமான கார்ல் மார்க்ஸின் லண்டனில் உள்ள கல்லறை மர்ம நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.  

லண்டனின் வடக்கு பகுதியில் ஹைகேட் என்ற இடத்தில் இருக்கும் அவரது கல்லறை மீது யாரோ ஒருவர் சுத்தியலால் அடித்திருப்பதாக அந்தக் கல்லறை நிர்வாகத்தின் ட்விட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்தக் கல்லறையில் கார்ல் மார்க்ஸின் பெயரைத் தாங்கிய பளிக்குக் கல் சிதைக்கப்பட்டுள்ளது. கூடிய விரையில் அந்த நினைவுச் சின்னம் சரிசெய்யப்படும் என்று கல்லறை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.  

எனினும் கார்ல் மார்க்ஸ் கல்லறை தாக்கப்படுவது வழக்கமானது என்றும் ஆனால் அடிக்கடி நிகழாத ஒன்று என்றும் ஹைகேட் கல்லறை அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது.  

இது தொடர்பிலான மோசமான சம்பவம் ஒன்று 1970இல் இடம்பெற்றுள்ளது. அப்போது கல்லறையை குழாய் குண்டு மூலம் தாக்கி அழிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

1818 தொடக்கம் 1883 வரை வாழ்ந்த மார்க்ஸின் புரட்சி சித்தாந்தம் ரஷ்யா, கியூபா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அரசியல் இயக்கமாக உருவெடுத்தது.    

Thu, 02/07/2019 - 09:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை