கோத்தாவின் வழக்கை விசாரிப்பதற்கு எதிரான மனு நிராகரிப்பு

Rizwan Segu Mohideen
Special High Court Rejects Gotabaya’s Objection to Challenging Jurisdiction-கோத்தாவின் வழக்கை விசாரிப்பதற்கு எதிரான மனு நிராகரிப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தாக்கல் அடிப்படை எதிர்ப்பு மனு விசேட மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

டி.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியக மோசடி தொடர்பில் விசாரிக்க மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என, தெரிவித்து கோத்தாபய ராஜபக்ஷ தாக்கல் அடிப்படை எதிர்ப்பு மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

33.9 மில்லின் ரூபா பொது மக்கள் நிதியை மோசடியாகப் பயன்படுத்தி மெதமுலனவில் டீ.ஏ.ராஜபக்‌ஷ நினைவுத்தூபி மற்றும் நூதனசாலை ஆகியவற்றை அமைத்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உட்பட ஏழு பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி முதல் தினமும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன, சம்பா ஜானகி ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகளின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஏற்கனவே கடந்த வருடம் டிசம்பர் 04 ஆம் திகதி நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.

Mon, 02/11/2019 - 10:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை